மாநிலம் முழுவதும் அரசு வேலைக்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு.!! - Seithipunal
Seithipunal


மாநிலம் முழுவதும் அரசு வேலைக்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு.!!

தமிழகத்தில் பத்து, பன்னிரண்டு மற்றும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும், பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். 

அவ்வாறு தவறும் பட்சத்தில் இரண்டு மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:- "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766. 

அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 87 ஆயிரத்து 537 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 53 ஆயிரத்து 916 பேர். 

31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 51 ஆயிரத்து 474 பேர். 46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர். 

மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixty six lakhs peoples apply and waiting govt jobs in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->