ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்க நவீன ஏ.டி.எம் மெஷின்.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும் சரியான அளவில் உணவு பொருட்களை வழங்கவும் தானியங்கி இயந்திரம் மூலம் உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரேஷன் கடைகளில் நவீன ஏடிஎம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகைகளை பதிவு செய்து உணவு பொருட்களை பெறும் வகையில் நவீன ஏடிஎம் மிஷின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏற்கனவே வாரணாசி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் இந்த வகை ஏடிஎம்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் 7 கிலோ உணவுப்பொருட்களை இந்த மிஷின் வழங்குகிறது. மேலும் ரேஷன் கடைகளில் எடை அளவு ஆகியவற்றில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க இந்த ஏடிஎம் மெஷின் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smart ATM ration shop in uttarpradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->