மக்களே உஷார்! தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்! 8 பலி..10,000 பேருக்கு டெங்கு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களால் பள்ளிக்கு செய்த இயலவில்லை. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் கிராமங்களில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று 2731 பேரு டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 524 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 973 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூரில் மட்டும் ஒரே நாளில் 270 பெருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

So far more than 10000 people have dengue fever in Karnataka state


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->