ஜம்மு காஷ்மீர்: எல்லைப் பகுதியில் கண்ணிவெடி வெத்ததில் ராணுவ வீரர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள கெர்னி செக்டார் பகுதியில் நேற்று காலை ராணுவ வீரர்கள் குழு ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பொழு துகாலை 11:15 மணியளவில் அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை ராணுவ வீரர் ஒருவர் மிதித்ததால், வெடித்து சிதறியுள்ளது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து காயமடைந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அன்ஷுல் ராவத்துக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. பின்பு சிறப்பு சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ கட்டளை மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soldier hurt in mine blast in Poonch Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->