இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தென்கொரிய பெண் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!
south korean country women arrested in india
தென்கொரிய பெண் ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைக் மாவட்டம் ரூபைதிகா பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பெண் ஒருவர் நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றுள்ளார்.

இதைப்பார்த்த போலீசார் பெண்ணை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது பெயர் பார்க் செர்யோன் என்பதும், அவர் தென் கொரியா நாட்டில் உள்ள சியோல் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
south korean country women arrested in india