பௌர்ணமி - தைப்பூசம் : சேலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் பொன்முடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 

"வருகிற பௌர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாகவும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாகவும், எடப்பாடியிலிருந்தும் பழனிக்கு பேருந்து இயக்கப்படுகிறது. 

இதேபோல், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காளிப்பட்டிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், நாமக்கல், திருச்செங்கோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

ஆகவே, பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தை முன்கூட்டியே முடிவு செய்து, பயண நெரிசலை தவிர்த்து பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special bus for thaipoosam and full moon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->