மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்து இருப்பதாவது:

வரும் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து வண்டி எண்: 06076/06075 உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மாலை 5.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில்கள் மதுரைக்கு மறுநாள் அதிகாலை 1.20மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 8.15 மணிக்கு கிளம்பும் ரயில் தாம்பரத்திற்கு பிற்பகல் 3.25 மணிக்கு வந்து சேரும். 

சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு வண்டி எண்; 06079 நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செண்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். 

மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து 28 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special train run to madurai and kanniyakumari for deepawali festival


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->