CAA : மேற்கு வங்காளம், ஹரியானாவில் எதிர்ப்புகளை மீறி குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியது..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியக் குடியுரிமை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 

அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா, CAA இந்திய தேசத்தின் சட்டம். இது நடைமுறைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து கடந்த மார்ச் 11ம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 

மேலும் இதற்கு விண்ணப்பிக்க பிரத்தியேகமாக ஒரு வலைத்தளத்தையும் உள்துறை அமைச்சகம் உருவாக்கியிருந்தது. மேலும் கடந்த 15ம் தேதி முதற்கட்டமாக விண்ணப்பித்தவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தங்கள் மாநிலத்தில் CAA அமல்படுத்தப்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Started Providing Citizenship in west bengal and Haryana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->