அரசு முறை பயணம்.. மாஹேவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர்!
State visit Lt Governor launches various welfare schemes in Mahe
மாஹே அரசு பொது மருத்துவமனையில் பத்து படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவை புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்திறந்து வைத்தார்.விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத், மகி மண்டல நிர்வாக அதிகாரி மோகன் குமார், மகே நகராட்சியின் ஆணையர் சத்தியேந்திர சிங், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு முறை பயணமாக மாஹே சென்றுள்ள புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மாஹேயில் வணிக விழாவைத் தொடங்கி வைத்தார். மேலும், மாஹே நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் அனைத்து ரேஷன் அட்டை தவறுகளுக்கும் தீபாவளி இலவச அரிசி, வறுமை கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்களுக்கு புதிய சிறப்பு ரேஷன் அட்டை, மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் புதிய பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பயனாளிகளுக்கு எல். ஜி. ஆர். பட்டா, பாரதப் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.
மேலும்,விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கினார்.இதேபோல் மாஹே அரசு பொது மருத்துவமனையில் பத்து படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவை துணைநிலை ஆளுநர் திறந்து வைத்தார்.விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத், மகி மண்டல நிர்வாக அதிகாரி மோகன் குமார், மகே நகராட்சியின் ஆணையர் சத்தியேந்திர சிங், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
State visit Lt Governor launches various welfare schemes in Mahe