ஐயோ இந்த அதிசயத்தை பாருங்களேன்!!! வினோதமாக அழகான 2 தலை கன்றுக்குட்டி...!!!
strangely beautiful 2 headed calf
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா என்பவர். இவர் விவசாயம் தொழில் செய்கிறார்.

விவசாயியான இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.அந்த வினோதமாக கன்றுக்குட்டி 2 தலைகள், 4 கண்களுடன் பிறந்துள்ளது.
இதனால் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்த எல்லப்பா உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்தார்.விரைந்து வந்த கால்நடை மருத்துவர் கன்றுக்குட்டியை பரிசோதனை செய்தபிறகு, குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த கன்றுக்குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெயடுத்து தற்போது வருகிறது.
அதிசயமான இந்த வினோதக் கன்றுக்குட்டியின் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
English Summary
strangely beautiful 2 headed calf