4 சிறுமிகளுக்காக ஊரே சேர்ந்து கொலை செய்த சம்பவம்!
street dog that bit 4 girls was beaten to death by the villagers
கர்நாடகா : 4 சிறுமிகளை கடித்து குதறிய தெருநாயை கிராம மக்கள் ஒன்று கூடி அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் புறநகர் காரல்தின்னே கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் நேற்று முன்தினம் மாலையில் தங்களது வீட்டின் முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய் சிறுமிகள் மீது பாய்ந்து கடித்துக் குத்தறிவுள்ளது. நாயிடமிருந்து தப்பிக்க சிறுமிகள் அலறி அடித்தபடி அங்கும் இங்கும் ஓடினார்கள்.ஆனாலும் அந்த நாய் சிறுமிகளை விரட்டி விரட்டி கடித்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் அந்த நாயை விரட்டி விட்டு சிறுமியை மீட்டார்கள். தெரு நாய் கடித்ததில் பவானி, ஆலயா, அல்லியா, ரேஷ்மா ஆகிய நான்கு சிறுமிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நான்கு சிறுமிகளுக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே நான்கு சிறுமிகளை கடித்து குதறிய தெரு நாய் ஒரு எருமை மாட்டையும் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தெருநாயை கற்கள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
English Summary
street dog that bit 4 girls was beaten to death by the villagers