மாநில அரசை கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. பாஜக எம்.பியின் பரபரப்பு ட்விட்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வாழும் குக்கி இன மக்களுக்கும் தாழ்வான நிலப்பரப்புகளில் அதிகம் வசிக்கும் மைதேயி இனக்குழுவினருக்கும் இடையே கடந்த மாதம் மே 3ம் தேதி முதல் வன்முறை வெடித்துள்ளது.

மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி இன அந்தஸ்து அளிக்கும் பாஜக அரசின் முடிவுக்கு அப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவரர்களான குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இருதரப்புக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தால் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 50,000க்கும் மேற்படோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆளும் பாஜக அரசின் பெண் அமைச்சர் வீடு மற்றும் மத்திய அமைச்சர் வீடு ஆகியவற்றை வன்முறை கும்பல் தீ வைத்தது. இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தின் பாஜக தலைவர்கள், நிர்வாகிகளை வன்முறை கும்பல் இலக்கு வைத்து தீ வைப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மணிப்பூர் வன்முறை, ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவக் கூடிய அச்சமும் அங்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "மணிப்பூரை ஆளும் பாஜக அரசை அரசியலமைப்பு சட்டம் 356வது பிரிவின் கீழ் கலைக்க வேண்டிய நேரம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள்" என பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramania Swamy tweet time has come to withdraw Manipur govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->