மோடி, அமித்ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும் - சுப்ரமணிய சுவாமி வேண்டுகோள்.!!
subramaniya swami tweet about rest to modi and amitsha
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் தளமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இரண்டு வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் உளவுத் துறையின் தோல்வி தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வைத்துக்கொண்டு, இனி பாஜக ஆட்சியமைக்க முடியாது.
கடந்த கால அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்று, இவர்களுக்கும் ஓய்வளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
subramaniya swami tweet about rest to modi and amitsha