ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: உயிர் தப்பிய தம்பதி! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காருக்கு மேலே அமர்ந்து உயிர் தப்பிய தம்பதி.  சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

கடந்த சில நாட்களாகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், நைனா மிஸ்ட்ரி தம்பதி தங்கள் உறவினர்களை பார்ப்பதற்கு நேற்று காரில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதற்கிடையில் தம்பதியினர், கடியரா , வித்யாவீரர் கிராமங்களுக்கு இடையே கரோல் ஆற்றுப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீர் வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் தம்பதியர் காருக்குள் மாட்டிக்கொண்டனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்க கார் இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், பாறை மீது மோதிய கார் வெள்ளத்தின் நடுப்பகுதியில் மாட்டியுள்ளது. இதற்குப்பின், வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக காரின் உள்ள இருந்து காருக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டனர் .

இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த பக்கத்து கிராமத்தினர் உடனடியாக போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.  போலீசார் தகவலறிந்து விரைந்து வந்தனர், பின்னர், சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்புக்குழுவினர் அந்த தம்பதியை பத்திரமாக மீட்டனர். 

இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden flood in the river the couple survived


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->