கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய விளையாட்டுக்கான திருவிழாக்களில் கால்பந்தும் ஒன்று. இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 1930-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

அதில், இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் களம் காணுகின்றனர். இந்நிலையில், இந்தக் கால்பந்து பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி பூரி கடற்கரையில் எட்டு அடி உயர மணல் சிற்பத்தை சுதர்சன் பட்டனாயிக் உருவாக்கி உள்ளார். 

இந்த மணல் சிற்பத்தில், கால்பந்துத் போட்டியில் பங்கேற்றுள்ள 32 நாடுகளை சேர்ந்த 1,350 நாணயங்களையும், இந்திய நாணயங்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். இந்த நாணயங்கள் அனைத்தையும் உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு மணல் சிற்ப போட்டிகளில் பங்கேற்ற போது சேகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudharsan patanaik sand art in puri beach for football match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->