ஆஸ்கார் விருது வென்ற இந்திய படங்களுக்கு மணற்சிற்பம் மூலம் வாழ்த்து.!
sudharsan patnayak create sand sculpture for oscar award won indian movies
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் உலகத்தில் நடைபெறும் அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் தனது கருத்தை சிற்பத்தின் மூலம் தெரிவித்து வருபவர்.
உலகில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து கருத்து தெரிவிப்பார். மன்னார் சிற்பம் செய்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று, அமெரிக்கா நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் சார்பில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
இதற்காக பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசிய கட்சித் தலைவர்கள், திரையிசை வட்டாரங்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்துள்ளனர். அந்த வகையில் மன்னார் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கும் மணல் சிற்பம் வரைந்து அதன் மூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
English Summary
sudharsan patnayak create sand sculpture for oscar award won indian movies