பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் - மத்திய அரசு அசத்தல்.!
sukanya samiriddhi yojana scheme start for girls
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் - மத்திய அரசு அசத்தல்.!
நாட்டில் பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" என்ற பரப்புரையின் கீழ் மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது.
மகளின் எதிர்காலத்தை பெற்றோர் திட்டமிடும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், 8 சதவீத வட்டி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், தனி நபர் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். டெபாசிட் தொகை 21 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும்.
இந்தத் திட்டத்தில், ஒரு நபர் குறைந்தபட்சம் 250 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை தங்களுடைய வருடாந்திர பங்களிப்பை செலுத்தலாம். இந்தக் கணக்கை தொடங்குவதற்கு பெண் குழந்தை இந்தியராக இருக்க வேண்டும்.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் பெற்றோர் முதலீடு செய்தால், கணக்கு முதிர்ச்சியின் போது ரூ.67.3 லட்சம் வரை ரிட்டன் கிடைக்கும். இந்த திட்டம் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு பயன் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
English Summary
sukanya samiriddhi yojana scheme start for girls