நீட் மறுதேர்வு நடத்த முடியாது - ஒரே போடாக போட்ட உச்ச நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal



கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக மாணர்வகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாணவர்கள் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். அப்போது நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே உச்ச நீதிமன்றம் சிபிஐ மற்றும் தேசிய தேர்வு முகமையை பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேசிய தேர்வு முகமை கடந்த வாரம் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்தது. 

இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் "இந்த வழக்கை லட்சக் கணக்கான மாணவர்கள் எதிர் நோக்கியுள்ளனர். எனவே இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதை அனைவரும் அறிவோம்" என்று தெரிவித்தார். 

இதையடுத்து இன்று சிபிஐ தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வினாத்தாள் கசிவால் தேர்வு முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மனுதாரர் நிரூபித்தால் மட்டுமே இந்த தேர்வை ரத்து செய்ய முடியும். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாமல் அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து மனு தாரர் தரப்பு " நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த கோரவில்லை என்றும், அதில் தேர்வான 1.08 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே மறுதேர்வு கோரிக்கையை வைத்துள்ளோம்" என்றும் தெரிவித்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Announced No NEET Cancellation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->