10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதி வகுப்பினருக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தில் அவைகளிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழுக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு 10% இட ஒதுக்கீடு அரசின் கொள்கை எனவும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இட ஒதுக்கீட்டை உறுதி செய்த தீர்ப்பில் எந்த பிழை இல்லை என கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court dismisses EWS reservation revision petition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->