#BREAKING :: ராமர் பாலம் வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம்..!!
Supreme court granted time to Central govt respond in Ramar bridge case
மத்திய அரசு கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலம் சிதைந்து போகும் என மேற்கோள் காட்டி அந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ராமர் பாலத்திற்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதியளித்தார். இந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசால் எந்தவித பதில் மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான சுப்பிரமணியசுவாமி "கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ராமர் பாலத்தை பாரம்பரிய புராதான சின்னமாக மத்திய அரசால் அறிவிக்க முடியுமா? முடியாதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது என குற்றம் சாட்டி இருந்தார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "இந்த வழக்கின் பதில் மனு தயாராகி சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் ஒப்புதிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பதில் மனு தாக்கல் செய்ய கால அட்டகாசம் வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 6 வார காலம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இடைப்பட்ட காலக அவகாசத்தில் பதில் மனு மற்றும் விளக்க மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் 6 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "ராமர் பாலம் தொடர்பான பிரமாண பத்திரம் தயாராகி வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும்" என உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி மாதம் 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
Supreme court granted time to Central govt respond in Ramar bridge case