புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்! ஆவணங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Supreme Court order to submit documents related of new Election Commissioner
இந்திய தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரத்தை வரையறுக்கும் இந்திய தேர்தல் ஆணைய சட்டம் 1991-ன் படி பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரை பதவியில் நீடிக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலமே பதவியில் இருக்கும் படி நியமிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக இதில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக கடந்த 19ஆம் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் கோயல் எதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அவர் நியமனத்தில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என மத்திய அரசு தரப்பிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையின் இறுதியில் இந்திய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்தி வைத்தனர்.
English Summary
Supreme Court order to submit documents related of new Election Commissioner