'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஏன் தடை?.. மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு நிர்வாகங்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.

அதனைத் தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். மேலும் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மேற்குவங்க மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து கேரளா ஸ்டோரி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரித்தார். 

இந்த நிலையில் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது மேற்கு வங்க அரசு ஏன் படத்தை தடை செய்ய வேண்டும். மேலும் படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும். அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை செய்ததற்கான விளக்கம் கேட்டு தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு வரும் மே 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court questioned to West Bengal why ban Kerala story movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->