உங்க மன்னிப்பை ஏற்க முடியாது.!! பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்.!!
Supreme court refused Baba Ramdev unconditional apology
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மூலம் விற்கப்படும் மருந்துகள் தொடர்பான விளம்பரத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனம் மருந்துகள் விற்பனைக்காக உண்மைக்கு புறம்பாக, ஆதாரமற்ற தகவல்களை பரப்ப கூடாது என அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அதனையும் மீறி பதாஞ்சலி மருந்துகள் தொடர்பாக விளம்பரங்களை வெளியிட்ட பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச உத்தரவை மீறி தவறான தகவல் பரப்பும் விளம்பரத்தை தயாரித்த பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் நீதிபதிகள் காட்டமாக தங்கள் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
English Summary
Supreme court refused Baba Ramdev unconditional apology