அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு! - Seithipunal
Seithipunal


மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் நடைபெற்ற முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஒரு மாதம் காலத்திற்கு இடைக்கால ஜாமீன் பெற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மீண்டும் திகார் சிறைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து வருகிறார். அமலாக்க துறையின் கைது நடவடிக்கையால் ஜாமின் கிடைக்காத நிலையில் திகார் சிறையில் உள்ள அவரது சிபிஐ கைதுக்கு எதிராக இந்த வழக்கை உள்ளதாக கூறப்படுகிறது.

கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம்  மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court refuses to grant interim bail to Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->