நிதிஷ் குமாரை விமர்சித்த சுனில்குமார் சிங்கின் பதவி பறிப்பு உத்தரவு தொடர்பில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!
Supreme Court verdict on the order to remove Sunil Kumar Singh from office for criticizing Nitish Kumar
பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, சட்ட மேலவையில், கிண்டல் அடித்ததற்காக, ஆர்.ஜே.டி., கட்சியின் எம்.எல்.சி., சுனில்குமார் சிங் அம்மாநில சபையிலிருந்து நீக்கப்பட்ட்டார். இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, உச்சநீதி மன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவதற்காக, அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொள்கிறார் என சட்ட மேலவையில் ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி., சுனில்குமார் சிங் கடந்த ஆண்டு கிண்டல் அடித்தித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் சபையில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து, அவருக்கு பதில், புதிதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக, தேர்தல் ஆணையகம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து, எம்.எல்.சி., சுனில்குமார் சிங் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோரை கொண்ட அமர்வு, 'எதிரணியினரை எப்படி விமர்சிப்பது என்பது கூட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மறந்து விட்டதோ' என கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள், 'எம்.எல்.சி., சுனில்குமார் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அதிகபட்சமானது; இதுவரை இல்லாதது' என கூறி, பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தும் எம்.எல்.சி.,யாக தொடரவும் உத்தரவிட்டனர்.
English Summary
Supreme Court verdict on the order to remove Sunil Kumar Singh from office for criticizing Nitish Kumar