வக்பு வாரிய சட்டதிருத்தும் - திமுக நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை..!!
dmk mlas wear black badge against waqf board amendment
திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து சட்ட சபைக்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மக்களவையில், பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வாக்கெடுப்புக்கு பிறகு இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.
English Summary
dmk mlas wear black badge against waqf board amendment