31-ந் தேதி முதல் விமான சேவை திடீர் நிறுத்தம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. 

மேலும் இந்த விமான சேவை, வருமானம் குறைவாக வந்ததால் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு அரசு மீண்டும் விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்ததன் பயனாக மீண்டும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு அக்டோபர் மாதம் முதல் விமான இயக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் செலவை ஈடு செய்யும் அளவிற்கு கூட டிக்கெட் முன்பதிவு இல்லை. விமானத்தில் உள்ள 78 இருக்கைகளில் போதிய அளவு பயணிகள் இல்லாமல் நாள்தோறும் புதுவையில் இருந்து பெங்களூருக்கும், ஹைதராபாத்திற்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. 

இதனால் நஷ்டத்தை சந்தித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருகின்ற 31ஆம் தேதி முதல் விமான சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது. 

இதன் முதல் கட்டமாக வருகின்ற 30 ஆம் தேதி முதல் பெங்களூரு, ஐதராபாத்துக்கான விமான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suspension spicejet flight services from 31st


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->