கடிக்க பாய்ந்த வளர்ப்பு நாய்... 3வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர்... உயிர் போச்சே...!! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத் அடுத்த யூசப்கூடா பகுதியில் உள்ள ராம் நகரை சேர்ந்தவர் முகமது ரிஸ்வான். இவர் ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு பஞ்சாரா ஹில்சியில் உள்ள லும்பினி ராக் கேஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார். அப்பொழுது வாடிக்கையாளர் வீட்டுக் கதவை தட்டும் பொழுது வீட்டில் இருந்த நாய் ஒன்று குறைத்தபடியே அவரை நோக்கி ஓடிவந்துள்ளது. 

இதனால் ரிஸ்வான் பயத்தில் 3வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் ரிஸ்வானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ரிஸ்வானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மறுநாள் உணவு ஆர்டர் செய்த நாயின் உரிமையாளரான ஷோபனா என்ற பெண் மீது ரிஸ்வானின் சகோதரர் முஹம்மது காஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சோபனா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரிஸ்வான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swiggy guy died after fall from 3rd floor due dog bite


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->