புதுச்சேரியில் அதிமுக சார்பில் பந்த்.. தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு..!!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்த நிலையில் புதுச்சேரியில் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழக பேருந்துகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. 

அதிமுகவினரின் பந்த அறிவிப்பை காரணமாக வைத்து சமூக விரோதிகள் ஆபூர் சாலையில் பயணிகளை ஏற்றிவந்த இரண்டு டெம்போ வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் அந்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதேபோன்று புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகளின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர். 

அதே போன்று கடலூர் நோக்கி மரபாலம் வழியாக சென்று கோரிந்திருந்த தனியார் பேருந்தையும் மர்ம நபர்கள் தாக்கியதில் பேருந்தில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பந்த் அறிவித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுகவின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu bus glasses broken in Puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->