பெங்களூர் : மனநலம் பாதித்த இளம்பெண் கற்பழிப்பு - சிக்கிய தமிழக தொழிலாளி - Seithipunal
Seithipunal


பெங்களூரில் மனநலம் பாதித்த இளம் பெண்ணை கற்பழித்த தமிழக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 19 வயது மனநலம் பாதித்த இளம்பெண். இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து மனநலம் பாதித்த இளம்பெண்ணை தாக்கி, கற்பழித்துள்ளார். இந்நிலையில் இதையறிந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இளம் பெண்ணை தாக்கி கற்பழித்தது தமிழகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜபீ உல்லா என்ற இப்ராகிம் பாஷா(30) என்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து இப்ராகிம் பாஷாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகே வசித்து வந்த இவர், இளம்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணை தாக்கி கற்பழித்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu laborer arrested for raping mentally challenged girl in Bengaluru


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->