தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்பியாக செயல்படுவேன் - நடிகர் சுரேஷ் கோபி!!
Tamil Nadu looking mp work Actor Suresh Gopi
தமிழ்நாட்டு விஷயங்களை கவனிக்கும் எம்.பி ஆக செயல்படுவேன் என்று கேரளா பாஜகவின் முதல் எம்.பி சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில் அஜித்துக்கு அண்ணனாக நடித்திருப்பார். பின்னர் ஐ, தமிழரசன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளா திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றதன் மூலம் கேரளாவில் பாஜக காலூன்றியுள்ளது.
நடிகர் சுரேஷ்கோபி பேசுகையில், நான் பிரச்சாரத்தின் போது 90 சதவீத இடத்தில் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்ியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் திருச்சூர் எம்பியாக மட்டும் செயல்பட மாட்டேன். ஒட்டுமொத்த கேரளாவிற்கும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருக்கும் திட்டங்களில் செயல்படுத்தும் எம்பி யாக இருப்பேன்.
தொடர்ந்து பேசிய நடிகர் சுரேஷ் கோபி, என் பேச்சுக்கு மக்கள் மதிப்பளித்து எனக்கு வாய்ப்பதித்துள்ளனர். இப்பொழுதும் கூறுகிறேன் ஒட்டு மொத்த கேரளாத்திற்கும் தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்பியாக செயல்படுவேன் என்று கூறினார்.
English Summary
Tamil Nadu looking mp work Actor Suresh Gopi