கேரளா || கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளி பிணமாக மீட்பு.!!
tamilnadu worker body rescue in kerala
கேரளா || கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளி பிணமாக மீட்பு.!!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கிணற்றுக்குள் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியை 50 மணி நேரத்திற்கு மேலாக போராடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் அருகே முக்கோலா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மகாராஜா என்ற தொழிலாளி சனிக்கிழமை காலை கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றுக்குள் மண் சரிவு ஏற்பட்டதில் மகாராஜன் சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்பதற்கான பணி நேற்று காலை முதல் தொடங்கியது. ஆனால், நேற்று அவரை மீட்க முடியாததால், இன்றும் இரண்டாவது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வந்தது. மீட்புப் பணி நடைபெற்று கொண்டிருக்கும்போதே மீண்டும் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் மண் அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து ஐம்பது மணி நேரத்திற்கு மேலாக போராடிய நிலையில் மண் அகற்றப்பட்டது. நீண்ட நேரம் போராடியும் மகாராஜா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் கிணற்றுக்குள் மண் சரிவு ஏற்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி மண்ணுக்குள் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tamilnadu worker body rescue in kerala