நடுவானில் பறக்கும் விமானத்தில் தஞ்சை பயணி இறந்த சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே நடுவானில் பக்ரைன் விமானம் புறப்பட்டபோது, ​​தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது. தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது (66).

இவர் மெக்கா புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை கல்ஃப் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். இந்த விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருந்தபோது, ​​நடுவானில் திடீரென ராஜா முகமதுவுக்கு நெஞ்சுவலி தொடங்கியது. இதையடுத்து, விமான ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி ராஜா முகமதுவை பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே சுயநினைவு இழந்த நிலையில் இறந்தது தெரியவந்தது, இதைத் தொடர்ந்து ராஜா முகமது மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் ராஜா முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பயணிகள் புறப்படத் தயாராக இருந்தனர். இருப்பினும் பயணி ராஜா முகமது மாரடைப்பால் நடுவானில் இறந்ததால், விமானத்தை சுத்தம் செய்தவுடன் மட்டுமே மீண்டும் இயக்க முடியும் என்று விமானி அறிவித்தார். இதையடுத்து விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் இன்று காலை 6:40 மணிக்கு 192 பயணிகளுடன் பஹ்ரைனுக்கு விமானம் புறப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tanjore passenger dies in mid air flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->