ஆபாச வீடியோ காட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆபாச வீடியோ காட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் டாங்கோர்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 52 வயது ஆசிரியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 8 மாணவிகளிடம் ஆபாச படத்தை காட்டியுள்ளார். மேலும் மாணவிகளை தவறான முறையில் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியரிடம் வட்டார கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் ஆசிரியரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrested for sexually harassing schoolgirls by showing obscene video in Maharashtra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->