பொய் குற்றச்சாட்டு! பிரபல புலனாய்வு செய்தி நிறுவனத்திற்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு அவதூறு செய்தி வெளியிட்ட தெஹல்கா செய்தி நிறுவனம், பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் தருண் தேஜ்பாலும், அனிருத்தா பஹலும் ஆகிய இருவரும், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தெஹல்கா செய்தி நிறுவனத்தை தொடங்கினர்.

இந்த செய்தி நிறுவனத்தில் புலனாய்வு செய்திகள் அதிகம் வெளியாகி வந்தன. அப்படியாக கடந்த 2001 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் அனிருத்தா, மேத்யூ சாமுவேல் இணைந்து 'ஆபரேஷன் பெஸ்ட் எண்ட்' என்ற ஒரு தலைப்பில் புலனாய்வு செய்தி ஒன்றை எழுதி இருந்தனர்.

அந்த செய்தியில் இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் நடந்து உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் தங்களது பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட மேஜர் ஜெனரலாக இருந்த அலுவாலியா டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, அலுவாலியா நற்பெயருக்கு தெஹல்கா செய்தி நிறுவனம் களங்கம் விளைவித்துள்ளது உறுதியாகியுள்ளது. 

ராணுவ அதிகாரி ஒருவர் மீது பொய்யாக குற்றச்சாட்டு சுமத்துவது, அந்த நபரின் மீதான நம்பகத்தன்மையை குலைக்கக்கூடியது என்று கூறி, மேஜர் ஜெனரல் அலுவாலியாவுக்கு செய்தியை வெளியிட்ட நிறுவனம் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tehalka news agency delhi HC order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->