வாக்களிக்காவிட்டால் நரகத்திற்கு தான் செல்வார்கள்..! பரபரப்பு கிளப்பிய பா.ஜ.க எம்.பி.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, நிஜாமாபாத் தொகுதி பா.ஜ.க எம்.பி அரவிந்த் கட்சி யாத்திரையின் பங்கேற்றபோது அவர் பேசியிருப்பதாவது, 

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் ஆரோக்கியத்தை கவனித்து வருகிறார். இலவச உணவு, கியாஸ், நல்ல பள்ளிகள் திருமணத்திற்கு பணம், சுய உதவி குழுக்களுக்கு கடன் போன்றவற்றை செய்து வருகிறார். 

தங்களுக்கு உணவளிக்கும் கையை மக்கள் கடிக்க வேண்டாம். பா.ஜ.கவுக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் கட்சி அல்லது பி.ஆர்.எஸ் கட்சிக்கு வாக்களித்தால் கடவுள் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வார். 

நீங்கள் சொர்க்கத்திற்கு போக மாட்டீர்கள். நரகத்திற்கு தான் போவீர்கள் என நான் சொல்கிறேன். சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தால் நாட்டிற்கு சேவை செய்து அதை பாதுகாப்பவர்களுக்கு ஆதரவளித்து பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டும். 

இல்லையென்றால் கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் என தெரிவித்தார். இந்த சர்ச்சை பேச்சு வீடியோ வெளியாகி தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana bjp MP speech goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->