திருட்டு வழக்கில் சிக்கிய தலித் பெண்! காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூர சித்தரவதை!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய பட்டியல் இன சமூகப் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தனகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஒருவரை, போலீசார் அந்தப் பெண்ணின் மகன் முன்னால்  வைத்து சித்திரவதை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த போலீசாரின் இந்த சித்திரவதை குறித்து பாதிக்கப்பட்ட பட்டிலின பெண் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில். முதலில் எனது கணவரை பிடித்து சென்று அடித்தனர்/ பின்னர் அவரை வெளியே விட்டு விட்டு என்னை விசாரணைக்காக அழைத்து வந்த போலீசார் என் சேலையை கழற்றி ஆபாசமான சில ஆடைகளை கொடுத்து என்னை உடுத்த சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

பின்னர் என் கை, கால்களை கட்டி வைத்து, போலீசார் தாக்கினார். ஒரு போலீசார் என் தலை முடியை பிடித்துக் கொள்ள. இரண்டு போலீசார் என் இரண்டு கால்களில் மீதும் கட்டையால் அடித்து துன்புறுத்தினார்.

நான் செய்யாத குற்றத்திற்காக என்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கெஞ்சி கதறி அழுது போராடினேன். ஆனால் என் காலை உடைத்து விட்டனர். நான் திருடுவதற்கு பதிலாக பிச்சை எடுப்பேன் திருட மாட்டேன் என்ற போலீசாரிடம் எவ்வளவோ எடுத்து கூறினேன். ஆனால் அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை.

 இந்த வழக்கில் எஃப்ஐஆர் கூட பதியவில்லை. சந்தேகத்தின் பெயரில் அழைத்து வந்து என்னை சித்திரவதைப்படுத்தி உள்ளனர் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் போலீசாரை விசாரணை செய்ய ஏசிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Dalit Police Woman Harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->