வறட்சியால் கருகும் நெற்பயிர்கள்: விவசாயிகள் செய்த அதிர்ச்சி சம்பவம்: தெலுங்கானாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்த விட வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். 

இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவு வருகிறது. 

இந்நிலையில் வறட்சி காரணமாக பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகியதை கண்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதனர். 

இதனை தொடர்ந்து இலந்த குண்டா அடுத்துள்ள பெத்தலிங்கப்பூரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை விவசாயிகள் தீயிட்டு எரித்தனர். 

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana farmers set fire paddy fields


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->