MLA-வின் செகரெட்டரியால் முகநூல் தோழிக்கு நேர்ந்த கொடூரம்.! கணவர் வீட்டில் இல்லாதது தெரிந்து அத்துமீறல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் ஜுப்ளி ஹில்ஸ் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மாஹந்தி கோபிநாத் என்பவருக்கு விஜய் என்ற நபர் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். விஜய்க்கு முகநூல் மூலமாக நிஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. 

இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அந்தப் பெண்ணை தன்னை காதலிக்கும் படி விஜய் வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், தனது ஆசையை இணங்க வேண்டும் என்று நிஷாவை தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால், அதிர்ச்சியடைந்த நிஷா விஜயின் செல்போன் என்னை பிளாக் செய்துவிட்டார். 

எனவே ஆத்திரத்தில் இருந்த விஜய் நேற்று இரவு யாரும் இல்லாத நேரம் பார்த்து நிஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரது கணவர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட விஜய் தனது ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தியுள்ளார். இதை நிஷா ஏற்காமல் மறுத்த காரணத்தால் தான் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலை உடைத்து அந்த கண்ணாடியை நிஷாவின் தொண்டையில் சொருகியுள்ளார். 

இதனால், அவர் அலறி அடிக்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது விஜய் தப்பியோடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

தங்கள் மேல் பொய் வழக்கு சித்தரிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர். எம்எல்ஏவின் உதவியாளர் என்ற காரணத்தால் உண்மையை மூடி மறைக்க அவர்கள் திட்டமிடுவதாக ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் நிஷா. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

telungana mla secretary trying to kill his facebook friend


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->