டீ, பஜ்ஜி சாப்பிட ஆம்புலன்ஸில் சைரனை போட்டு, அட்ராசிட்டி செய்த ஊழியர்.! பாட்டிலுடன் நின்ற நர்சால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடந்த திங்கள்கிழமை இரவு நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தவாறு மிக வேகமாக சென்றுள்ளது. அப்போது ஆம்புலன்ஸ் வேகமாக செல்வதற்கு ஏதுவாக டிராபிக் போலீஸ் ஒருவர் மற்ற வாகனங்களை சீர்படுத்தி ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் நேராக சென்று சாலையோரம் இருந்த ஒரு உணவகத்திற்கு முன் நின்றுள்ளது. உள்ளே நோயாளி யாரும் இல்லாமல், அந்த ஆம்புலன்ஸ் சைரன் அடித்துக்கொண்டு சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் எந்தவிதமான அவசரமும் இல்லாத பட்சத்தில் அவர் எதற்காக சைரனை பயன்படுத்தினார் என்று கேட்ட போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல அவர் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

ஆம்புலன்ஸில் நோயாளிகள் இல்லாமல் இரண்டு நர்சுகள் உள்ளே இருந்தனர். அவர்கள் கையில் ஜூஸ் பாட்டிலுடன் நின்றுள்ளனர். இது பற்றி டிரைவர் நர்ஸ் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். டீ மற்றும் பஜ்ஜி சாப்பிடுவதற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல அவர்கள் சைரணை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana Police caught who abusing ambulance Siren


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->