எம்.பி & எம்எல்ஏ-க்களை வரவேற்க பட்டாசு வெடித்து விபத்து.. 2 பேர் பலி.. பலர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களை வரவேற்க பட்டாசு வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹாமம் மாவட்டம் ஷிமலப்பேடு கிராமத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் இன்றைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்களை வரவேற்க கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அப்போது பட்டாசு தீப்பொறி அருகில் உள்ள குடிசையின் மீது விழுந்து தீ பற்றியது.

இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் குடிசை அருகில் நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்கள் பல படுகாயம் அடைந்தனர்.

மேலும் இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் மங்கு ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana rashtriya samithi meeting crackers accident 2 peoples death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->