தீபாவளிக்கு மட்டும் திறக்கப்படும் கோவில் - எங்கு உள்ளது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரில் 12 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரனின் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் உள்ளது. 

இந்தக் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நாட்களில் இந்த கோவிலின் நடை மூடப்பட்டிருக்கும்.

கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டம் மட்டும் இன்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

இந்த கோவிலுக்கு சென்று வழிப்பட்டால் ஆண்டு முழுவதும் நம்மை தீய சக்திகள் நெருங்காது என்றும், வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temple gate open at deepawali time only


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->