மூன்று வருடத்தில் 10.61 லட்சம் பெண்கள் மாயம் - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மூன்று வருடத்தில் 10.61 லட்சம் பெண்கள் மாயம் - எங்குத் தெரியுமா?

தேசிய குற்ற ஆவணம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- "நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. 

கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் கடந்த 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர். 

அதிலும் குறிப்பாக பதினெட்டு வயதுக்கும் கீழ் 2.51 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர். இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர். 

யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten point sixty one lakhs womans missing in india


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->