மணிப்பூரில் தொடரும் பதற்றம்!...6 பயங்கரவாதிகள் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த  2023-ம் ஆண்டிலிருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே  ஏற்பட்ட கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது

இந்த வன்முறையில்  சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். மேலும், கலவரத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றால் வன்முறை தொடர்ந்து  நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள  தவுபால் மாவட்டத்தில் மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தங்கஜம் தீபக் சிங், தோக்சோம் பிக்ரம் சிங், சினம் பிஜென் சிங், லம்பமாயும் நவோபி சிங் மற்றும் ஹுனிங்சும்பம் டோன் சிங் ஆகிய 5 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது 5 செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து, கையெறி குண்டுகள்,ஆயுதங்கள் மற்றும் 5 செல்போன்கள், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல், பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து ஒரு கையெறி குண்டு பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension continues in manipur 6 terrorists arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->