ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்!...பாதுகாப்பு படை வீரர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம்!
Tension in jammu and kashmir shocking incident where security forces were abducted by terrorists
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றுள்ளனர். அப்போது, 2 பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இருந்த போதிலும் அவர்களில் ஒருவர் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி வந்துள்ளார்.
தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய கட்டப் பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர் காணாமல் போன வீரரை மீட்கும் பணியில் தவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
English Summary
Tension in jammu and kashmir shocking incident where security forces were abducted by terrorists