ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்! கிராம பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த இருவரை கடத்தி கொலை செய்த பயங்கரவாதிகள்! தீவிர தேடுதல் வேட்டை! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் "காஷ்மீர் டைகர்ஸ்" குழுவால் கிராம பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த இருவர் கடத்திச் சென்று கொல்லப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டவர்கள் நசீர் அகமது மற்றும் குல்தீப் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்கள் மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு சென்றபோது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். கண்கள் தோண்டப்பட்ட நிலையில் அவர்களின் உடல் படங்களை பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர், இது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இத்தகைய கொடூர வன்முறைகள் ஜம்மு-காஷ்மீரில் நீண்டகால அமைதிக்கான முயற்சிகளுக்கு எதிரானவை," என உமர் அப்துல்லா குறிப்பிட்டார். 

அதேபோல், அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடும் நபர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்களுக்கு ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in Jammu and Kashmir Terrorists kidnapped and killed two members of the village security team Intense search


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->