தெலுங்கானாவில் பதற்றம்!....6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் ரகுநாத்பள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில்  குநாத்பள்ளி வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் மறைந்திருப்பதாக தெலுங்கானா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தகவலின் பேரில், போலீசார் இன்று வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
பதிலுக்கு, போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தில்,  6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவர் இருப்பதாக போலீசார் தரப்பில்  சொல்லப்படுகிறது.

மேலும், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in Telangana 6 Maoists shot dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->