மேற்கு வங்க பல்கலைக்கழகத்தில் இரு கட்சிகளிடையே பயங்கர மோதல்! காவல்துறை தீவிர விசாரணை!
Terrible clash between two parties in West Bengal University
மேற்குவங்க மாநிலத்தில் இருப்பினவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பானது.
மேற்குவங்க மாநிலத்தின் ஆளும் கட்சியினரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு திரிணாமுல் சத்ர பரிஷத் அமைப்பினர் மேற்கு மேதினி போரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடத்தினர். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் வலதுசாரி சிந்தனை கொண்ட ஏ பி வி பி மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக உருவெடுத்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவருக்கொருவர் தடிகளால் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து சூழ்நிலையை அமைதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது காவல்துறை.
English Summary
Terrible clash between two parties in West Bengal University