கேரளாவில் பயங்கர வெடி விபத்து!...கேஸ் அடுப்பினால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், கொச்சி அருகே ஆடு, மாடு உள்ளிட்ட  விலங்கு கொழுப்பை பதப்படுத்தி, அதுசார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இந்த நிறுவனத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர், தொடர்ந்து  காயமடைந்தவர்களை  மீட்ட போலீசார் அவர்களை  களமச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு கேஸ் அடுப்பின் பாதுகாப்பு வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதும், காயமடைந்த அவர்கள் மூவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible explosion accident in kerala a worker died due to gas stove


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->