ஜம்மு-காஷ்மீரில் பயங்கர அதிர்ச்சி!...விடிய விடிய நீடித்த துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
Terrible shock in Jammu Kashmir 3 terrorists shot dead in prolonged firing at dawn
ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி,
வரும் 18ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தலும், தொடர்ந்து வரும் 25ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மற்றும் அக்டோபர் 1ம் தேதி மூன்று கட்ட தேர்தல் என்று மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாராமுல்லா மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடிக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். நேற்று இரவு முழுவதும் தொடர்ந்த இந்த துப்பாக்கி சூடானது இன்று காலை வரை நீடித்தது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு தொடர்பு குறித்து கண்டறியப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
Terrible shock in Jammu Kashmir 3 terrorists shot dead in prolonged firing at dawn